கள்ளக்குறிச்சி
Kallakurichi





Matrimony- View and Add person on our site|Jobs-View and Add Job on our site
Click to Sankarapuram website
Site menu
Section categories
General Jobs
Tamil nadu Goverment Jobs
Villupuram District Jobs
Kallakurichi Jobs
Indian Goverment Jobs
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0


Locations of visitors to this page

கள்ளக்குறிச்சி சார்ந்த செய்திகள்

If  you cannot read Tamil font. Please download following font. Otherwise contact to admin.
Download this font  

கள்ளக்குறிச்சி நகர பகுதிகளில்டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதா, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் முனுசாமி உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி நகரில் இரண்டு நாட்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகர மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். துப்புரவு ஆய்வாளர் முருகேசன் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் சேலம் ரோடு, துருகம் ரோட்டில் பஸ், லாரி டயர்கள், தொட்டிகள், தேவையற்ற பொருட்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்துதல், கொசு மருந்து போட்டு அழித்தல், கொசு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் சுபஹான், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

கல்வராயன்மலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சின்னசேலம்: கல்வராயன்மலை வெள்ளிமலையில் பேருந்துநிலையம், வணிக வளாக திறப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலை வர் அலமேலு, மாவட்ட திட்ட இயக்குனர் முத்துமீனாள், ஒன்றியக்குழு தலைவர் வெள்ளி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிருந்தா தேவி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 
நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகம், அரசு கொறடா மோகன் ஆகியோர் கலந்துகொண்டு ரூ.72.62 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை யும், ரூ.24 லட்சம் மதிப் பில் கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தையும் திறந்து வைத்தார். 
பின்னர் மாவடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவமனை பிரிவும், கரியாலூ ரில் ரூ.30 லட்சம் மதிப்பில் பசுமைவீடுகள், ரூ.13.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்திரா குடியிருப்பு திட்ட வீடுகளையும் திறந்து வைத்தனர். தொடர்ந்து ரூ.3.10 லட்சம் மதிப்பில் ஆடு, மாடுகளும், ரூ.30 லட்சம் மதிப்பில் கடனுதவி களும் வழங்கப்பட்டது. 
இதேபோல் மேல்நிலவூர், கீழ்நிலவூர், கிளாக்காடு ஆகிய பகுதிகளில் ரூ.45 லட்சம் மதிப் பில் இலவச மிக்சி, கிரைண் டர், மின் விசிறி மற்றும் கடன் வழங்கப்பட்டது.  
விழாவில் அரசு கொறடா மோகன் பேசுகை யில் ‘கல்வராயன்மலையில் பரிகம் முதல் சேராப்பட்டு வரை 43 கி.மீ தூரம் ரூ.17 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வராயன்மலை யூனியன் சார்பில் ரூ.17 கோடியே 5 லட்சம் சார் பில் திட்டப்பணிகள், அடிப் படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. 
வெள்ளிமலையில் இருந்து தொரடிப்பட்டு வரை 15 கிராம மக்கள் பயனடையும் வகையில் புதிய பேருந்து இயக்கப்பட்டுள்ளது. 22 கிராமங்களுக்கு மின்வசதி செய்து தரப்பட்டுள்ளது. 
கல்வராயன்மலைக்கு மேலும் அடிப்படை வசதி களை செய்து தர ரூ.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் இளங்கோவன், கள்ளக்குறிச்சி ஆர்டிஓ உமாபதி, ஒன்றியக்குழு சேர்மன் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி ராஜசேகர், வடக்கநந்தல் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் அய்யப்பா, நிர்வாகிகள் கலியபெருமாள், கருப்பன், அன்னகரை, செங்கான், ஜப்பான்குமார், வெள்ளி மலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய துணைத்தலைவர் சித்ரா சேகர் நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சி நகராட்சி தேர்தல் 24 ஆயிரம் ஓட்டுகள் பதிவானது 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சியில் நடந்த தேர்தலில் 24 ஆயிரம் ஓட்டுகள் பதிவானது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டளித்தனர்.கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 15 ஆயிரத்து 623 ஆண் வாக்காளர்கள், 15 ஆயிரத்து 320 பெண் வாக்காளர்கள் உட்பட 30 ஆயிரத்து 943 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்குட்பட்ட 42 இடங்களில் நேற்று முன்தினம் உள்ளாட்சி மன்ற தேர்தல் ஓட்டுப் பதிவு நடந்தது. இத்தேர்தலில் 11 ஆயிரத்து 872 ஆண் வாக்காளர்கள், 12 ஆயிரத்து 129 பெண் வாக்காளர்கள் உட்பட 24 ஆயிரத்து ஒரு ஓட்டுக்கள் பதிவானது.நகராட்சியில் வார்டு வாரியாக பதிவான ஓட்டுகள் விபரம் வருமாறு: நகராட்சி முதல் வார்டில் 1,251 ஓட்டுகளும், 2வது வார்டில் 1,520, 3வது வார்டில் 799, 4வது வார்டில் 1,151, 5வது வார்டில் 987, 6வது வார்டில் 1,312, 7வது வார்டில் 883, 8வது வார்டில் 1,220, 9வது வார்டில் 1,306, 10வது வார்டில் 1,510 மற்றும் 11வது வார்டில் 901 ஓட்டுகளும் பதிவானது. இதேபோல், 12வது வார்டில் 1,272 ஓட்டுகளும், 13வது வார்டில் 1,172, 14வது வார்டில் 1,101, 15வது வார்டில் 1,738, 16வது வார்டில் 819, 17வது வார்டில் 762, 18வது வார்டில் 725, 19வது வார்டில் 1,063, 20வது வார்டில் 944, 21வது வார்டில் 1,565 ஓட்டுக்களும் பதிவானது.



எ கே டி பள்ளியில் உண்மையில் நடந்தது என்ன? முழு விவரங்கள்... 
கள்ளக்குறிச்சி :- 
நன்றி :- www.vinavu.com

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மெட்ரிக் பள்ளியில் 4 வயது யுகேஜி சிறுமிக்கு ஆசிரியைகள் செய்த பாலியல் வன்கொடுமை!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டத்தில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனியார்மய கல்வியின்  தரங்கெட்டத் தனத்தைப் பாருங்கள்!

கல்வித்துறை,  காவல் துறை அதிகாரிகள் பள்ளி முதலாளிக்கு ஆதரவாக!

இதை அம்பலப்படுத்த தயங்கிய ஜனநாயகத்தின் நான்காவது தூண்!


விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில்  யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமியிடம் பிரின்சிபால் லசி போஸ்கோ மற்றும் ஆசிரியர் போஸ்யா பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு மற்ற இரு வகுப்பு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர். வெளியில் சொன்னால் பாம்பு உள்ள இருட்டறையில் (Dark Snake Room) அடைத்து விடுவோம் என மிரட்டி வைத்துள்ளனர். அதனால் குழந்தை சொல்ல அஞ்சி ஒரு நாள் பயந்து பயந்து தாயிடம் சொல்லியது. அதிர்ச்சியுற்ற பெற்றோர் குழந்தையிடம் ஆசிரியைகள் என்னென்ன பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதை வாக்கு மூலமாக சிடியில் பதிவு செய்து காவல் நிலையத்தில் கொடுத்தனர்.

அது முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டன….

அதில்:

"இன்று 03.08.2011 தேதி 22.30 மணிக்கு காவல் நிலையத்தில் இருந்த போது கள்ளக்குறிச்சி ராஜசேகர் 28ஏ காந்தி ரோட்டை சேர்ந்த சுரேஷ் மனைவி கலைச்செல்வி எனபவர் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரை பெற்றுக் கீழ்கண்ட வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அனுப்புதல்:

கலைச்செல்வி, க/பெ சுரேஷ், 28ஏ காந்தி ரோடு, ராஜா நகர், கள்ளக்குறிச்சி,

பெறுதல்:

உயர்திரு காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்கள்,
காவல்நிலையம், கள்ளக்குறிச்சி.


ஐயா,

எனது மகள் ஜனனி சுமார் 4 வயது, ஏ.கே.டி பள்ளியில்  யு.கே.ஜி, சி.பி.எஸ்.சி ஏ செக்சனில் படித்து வருகிறாள். எனது மகள் எல்.கே.ஜி படிக்கும் போது அவளுக்கு டீச்சராக இருந்தவர் போஸியா என்ற மிஸ் ஆவார். சி.பி.எஸ்சியின் பிரின்சிபல் லெசி போஸ்கோ ஆவார். அவர்கள் இருவரும் என்னுடைய குழந்தை ஜனனியை தனி அறைக்கு அழைத்து சென்றனர். மகளை கட்டாய படுத்தி தனியாக இழுத்து சென்று தனி அறையில் துணிகளை கழட்ட சொல்லி எனது மகள் மார்பகங்களை கிள்ளுவதும், பெண் உறுப்பில் விரலை விடுவதும், மற்றும் அவர்கள் பெண் உறுப்பை நக்கச் சொல்வதும், தடவி விட சொல்வதும், மார்பகங்களை சப்ப சொல்வதும், நிர்வாணமாக்கிய நிலையில் டேபிள் மீது படுக்க வைத்து பேனாவை சொருக பார்ப்பது, என் பெண் மார்பகங்களை அவர்கள் இருவரும் சப்புவதும், கீழ் உறுப்பை நக்குவதும், அவர்கள் தங்கள் துணிகளை தூக்கி கொண்டு திரும்பி நின்று கொண்டு பென்சிலை என் மகள் கையில் கொடுத்து அவர்கள் பெண் உறுப்பில் உள்ளே விட சொல்வதுமாக  பாலியல் கொடுமை செய்திருக்கிறார்கள்.

எனது மகள் வலிக்கிறது என்று அழுதாள் கூட விடுவதில்லையாம் என்று தெரிவித்தாள். இதனை எனது மகள் மிகவும் தயங்கி தயங்கி தைரியம் கொடுக்க கொடுக்க ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்தார். அவளை அவ்வாறு ஒவ்வொரு முறையும் மேற்கண்டவாறு செய்யும் போதும் அல்லது செய்யச் சொல்லும் போதும் முடிந்த பிறகு வெளியில் சொல்லக் கூடாது. வெளியில் சொன்னால் பாம்பு ரூமில் வைத்து பூட்டி வைத்து விடுவோம், பாம்பு உன்னை கடித்து விடும். இதே போல் எங்கள் பேச்சை கேட்காத ஒரு பெண்ணை அப்படித்தான் பாம்பு ரூமில் வைத்து பூட்டிவிட்டோம் என்று அழுது கொண்டே கூறினாள்.

மேற்படி சம்பவம் எனது மகள் யு.கேஜி வந்த போது நடந்து வந்திருக்கிறது. யு.கே.ஜி சேர்ந்ததிலிருந்து எனது மகள் ஒழுங்காக படிப்பதில்லை, கேட்டதற்கு பாடம் நடக்கும் போது கூட போஷியா மிஸ் என்னுடைய யு.கே.ஜி ஏ செக்சன் மிஸ்ஸிடம் சொல்லி என்னை அழைத்து சென்று மேற்கண்டவாறு செய்வார். மேற்படி விஷயம் என் மகளுடைய வகுப்பு மிஸ்சுக்கும் எல்.கே.ஜி ஏ செக்சன் மிஸ்சுக்கும் தெரியும். ஆகவே கனம் ஐயா அவர்கள் மேற்படி தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கெட்டுக்கொள்கிறேன்.”

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
(ஓம்) / XXX   எஸ்.கலைச்செல்வி

"மேற்படி புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண் – 585/2011, பிரிவு 342, 323, 506(1) மற்றும் 377 இ.த.ச.படி பள்ளி முதல்வர் லேசி போஸ்கோ ஆசிரியை போசியா மற்றும் இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து இதன் அசல் மற்றும் வாதியின் புகாரை இணைத்து கனம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் கள்ளக்குறிச்சி அவர்களுக்கும், இதர நகல்களை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு முறையே பணிந்து அனுப்பப்படுகிறது.” 

bosco-portia

                                                                        பிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா  

Full news :- http://www.vinavu.com/2011/10/03/akt-school-report/      




உங்கள் சமையல், அழகு குறிப்புகள் மற்றும் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள் . நாங்கள் நமது இணையத்தளத்தில் வெளியிடுகிறோம்.
|Login |Registration|
Donate Money To Improve our site.
Advertisement to Contact :-
+919976969947.
 

Entries archive

Copyright Na Systems © 2024
Powered by uCoz