கள்ளக்குறிச்சி
Kallakurichi





Matrimony- View and Add person on our site|Jobs-View and Add Job on our site
Click to Sankarapuram website
Site menu
Section categories
சமையல் குறிப்புகள் [2]
சமையல் குறிப்புகள் பகுதி
கவிதைகள் [3]
கவிதைகள்
மருத்துவ குறிப்புகள் [1]
மருத்துவ குறிப்புகள்
கலைகள் [0]
கலைகள்
அழகு குறிப்புகள் [0]
அழகு குறிப்புகள்
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0


Locations of visitors to this page

Main » 2013 » September » 6 » சின்னத்தம்பி வேலு (Chinnathambi Velu)
1:57 PM
சின்னத்தம்பி வேலு (Chinnathambi Velu)
ஈன்றெடுத்த தாயின் மகனை
சான்றோனாக்கி
ஆன்றோர் முன்னிலையில்- இவன்
போன்றோர் இல்லையென பெரிதுவக்கும் - உலக
மன்றமே வியக்கும் மாணவனை
வென்றெடுக்க வைக்கும் உன்னதம்
நல்லதோர் குருவின் மகா உன்னதம்

மானுடக்குழந்தையின் ஒவ்வொரு மனமும்
தெளிந்த நீரோடை தான் -ஆனால்
அதில் கல்லெறிந்து கலங்க வைக்கவும்
தீயோனின் கழிவை கலக்கவும்
தாராளமாய் முன்னேறும் கீழியக்க சக்திகள்
ஏராளம் ஏராளம்......!!!-அதனை
அடித்து முறுக்கி ஆயுதமாக்கி
ஆக்கத்தை நோக்கி
அலைபாய வைக்கும் திறம்
நல்ல ஆசானின் வரம்....!

காட்டாறாய் புறப்படும்
இளமையின் ஆற்றலை
அணைக்கட்டாய் தடுத்து
வழிமுறை வகுத்து-நல்
விளைநிலம் நோக்கி
மானுடத்தின் வளம் செழிக்க
களமாட அனுப்பப்படும் வீரன்(மாணவன்)
நல்ல குருவின் திறன்.........

தரம் மாறிச்சென்ற
தாயிற்கு பிறந்த கருக்கூட-நல்லக்
குருவிற்கு திறந்தாலே போதும்
தீயோனின் அறைவரை சென்று
அறம் போதிக்கும்

அகம் புறம் இரண்டிலும்
அழுக்காறு அகற்றி
இருளுடமை இயலாமையை
இல்லாமை ஆக்கி
இறையுணர்வு புகுத்த
ஒளியாய் இருந்திடும்
ஒப்பிலா பணி குருவுடையது......

இத்தகு குருவின் சொல்லை
எத்தகு சூழலிலும் - நல்
வித்தாக ஏற்று செல்லலே
சொத்தாகும் உண்மையான மாணவனுக்கு...
குருவின் சொல்லை பின்பற்றலும்
அவரின்
கூர் உணர்வுடன் செயலாற்றலும்
நானிலம் போற்றும்படி வாழ்தலும்
நால்வர் வாழ்வினை சிறக்க வைத்தலும்
இன்றைய சீடனின்(மாணவனின்)
நன்றி நவிலும் நன்னெறியாகும்....

திசையேதும் புரியாமல்-உலகம்
வசபடுத்த முயன்றத்திசையில்
போக முயன்ற-இந்த
கலியுகக் கருவை,

புகழும் களிப்புமே
பூலோக பிறவியின் நோக்கமென்று
கல்வியையும் கலையையும்-அதற்காய்
அடித்தளமாக்க முயன்ற -இந்த
மாணவனின்
அகத்திணை திறந்திட வைத்து
திசைமாற வாழ்வுதனில் செல்ல-எனை
உங்கள் அன்பின் வசமாக்கி
அனுதினமும் எந்தன் சிந்தையை செப்பனிட்டு
என்னை இந்நிலைக்கி உயர்த்திட்ட
என் வாழ்வின் ஒவ்வொரு நிலை குருவிற்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்....!!!
Category: கவிதைகள் | Views: 789 | Added by: | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
உங்கள் சமையல், அழகு குறிப்புகள் மற்றும் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள் . நாங்கள் நமது இணையத்தளத்தில் வெளியிடுகிறோம்.
|Login |Registration|
Donate Money To Improve our site.
Advertisement to Contact :-
+919976969947.
 

Entries archive

Copyright Na Systems © 2025
Powered by uCoz